குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜனதா கேரேஜ் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார். ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்குகின்றார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் மோகன்லாலுக்கு ரூ 3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். கோலிவுட் மற்றும் டோலிவுட் சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தை விட மிகவும் குறைவு என்றாலும் கேரள சினி மார்கெட்டின் படி மோகன்லால் சம்பளம் பெற்றுக் கொள்கின்றாராம். இருப்பினும் ஐதரபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மோகன்லாலுக்கு தங்கும் வசதி, உணவு என தயாரிப்பு நிறுவனத்தார் ரூ 25 லட்சம் செலவு செய்துள்ளனர். மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். ஆகஸ்டில் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளதால் அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம.