பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் |
மோகன்லால் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்கள் அவ்வப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2007ல் அவரது நடிப்பில் வெளியான சோட்டா மும்பை திரைப்படத்தையும் கடந்த மே 21ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அறிவிப்பையும் வெளியிட்டனர்.
ஆனால் அதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மோகன்லால், ஷோபனா நடிப்பில் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான தொடரும் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்தும் தொடர்ந்து கூட்டம் அலைமோதியதால் சோட்டா மும்பை ரீ ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
அதுமட்டுமல்ல தொடரும் படத்தின் தொடர் ஓட்டத்தால் அதன் ஓடிடி ரிலீஸ் தேதியும் கூட முடிவு செய்யப்படாமல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் தொடரும் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது இதனைத் தொடர்ந்து சோட்டா மும்பை படம் வரும் ஜூன் 6ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகும் என மோகன்லாலே அறிவித்துள்ளார். இதையடுத்து மோகன்லால் ரசிகர்கள் அடுத்த உற்சாக கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.