இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
மலையாள திரையுலகில் மம்முட்டி நடித்த பிக் பி என்கிற படத்தில் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சமீர் தாஹிர். அதைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த நீலாகாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி மற்றும் சாய் பல்லவி துல்கர் நடித்த கலி என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார். பிறகு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் ஒளிப்பதிவாளராக மாறிய இவர் தொடர்ந்து ஒளிப்பதிவாளராகவே பணியாற்றி வருகிறார். குறிப்பாக சூப்பர் மேன் கதையம்சத்துடன் வெளியான மின்னல் முரளி படத்தில் இவரது ஒளிப்பதிவு மிகுந்த வரவேற்பு பெற்றது. கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் படமான ஆவேசம் படத்திலும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.
இந்த நிலையில் 2016ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கலி படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப இருக்கிறாராம் சமீர் தாஹிர். ஹீரோ வேறு யாரும் அல்ல.. இந்தமுறையும் துல்கர் சல்மான் தான். இதற்கான கதை உருவாக்கும் பணியில் சமீப நாட்களாக ஈடுபட்டு வரும் சமீர் தாஹிர் வேறு எந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். துல்கர் சல்மான் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்த பிறகு இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறாராம் சமீர் தாஹிர்.