வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற படம் வெளியானது. இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக இந்த படத்தை இயக்கியதன் மூலம் மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்தார். இந்த படம் ஓரளவு டீசண்டான வெற்றியை பெற்றது. இதுவரை தொடர்ந்து மம்முட்டி ஏற்கனவே நடித்து திரைக்கு வர தயாராக இருந்த பஷூக்கா திரைப்படம் பிப்ரவரி 14 வரும் காதலர் தினத்தன்று வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் சித்திரை விஷு கொண்டாட்டமாக ஏப்ரல் பத்தாம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை டினோ டென்னிஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல மலையாள கதாசிரியரான கலூர் டென்னிஸ் என்பவரின் மகன். அவரது கதைகளில் ஏராளமான ஹிட் படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் அவரது மகனை தனது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் மம்முட்டி. ஆச்சரியமாக இந்த படத்தில் கவுதம் மேனனும் பெஞ்சமின் ஜோஸ்வா என்கிற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.




