ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை |

மலையாள திரையுலகில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கினர். இதில் சில குணச்சித்திர நடிகர்கள், இயக்குனர்கள் மீது காவல்துறையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நிகழ்வுகளும் நடைபெற்றன.
இப்படி அடுத்தடுத்து பல நடிகைகள் புகார் கூறியதை தொடர்ந்து இதை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது கேரள அரசு. இந்த குழுவின் விசாரணையில் நடிகை ஒருவர் ஏற்கனவே பிரபல நடிகரும் தற்போது கொல்லம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவருமான முகேஷ் மீது கொடுத்திருந்த புகாரை விசாரித்து அதில் உண்மை இருக்கிறது என தற்போது முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த சிறப்பு விசாரணை குழு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடிகர் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனுடன் இமெயில் மற்றும் வாட்சப் ஆதாரங்கள் போன்றவற்றையும் சில சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே இதே நடிகையின் குற்றச்சாட்டின் பெயரில் தான் முகேஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந்த நிலையில் மீண்டும் அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.