வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
இயக்குனர் கவுதம் மேனன் டைரக்ஷனில் மம்முட்டி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டொமினிக் அண்டு தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரிய அளவில் வசூலை இந்த படம் பெறவிட்டாலும் நல்ல படம் என்கிற பெயரை ரசிகர்களிடம் பெற்றது. இன்னொரு பக்கம் இயக்குனர் மகேஷ் நாராயணன் டைரக்சனில் மோகன்லாலுடன் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். கிட்டத்தட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த படத்தை முடித்ததும் அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2023ல் இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பாலிமி என்கிற படத்தை இயக்கியவர். மம்முட்டிக்காக இவர் தயார் செய்து வைத்த கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், தனது மம்முட்டி கம்பெனி நிறுவனத்தின் மூலமாகவே இந்த படத்தை தயாரிக்கவும் மம்முட்டி முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.