1700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' | 'லடாக்' படப்பிடிப்பில் சல்மான்கானின் காயம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் | செப்டம்பர் 26ல் மீண்டும் இத்தனை படங்கள் வெளியீடா? | கவுதம் கார்த்திக்கின் 'ரூட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | இப்போதைக்கு ஓடிடியில் லோகா ஒளிபரப்பாகாது ; துல்கர் சல்மான் திட்டவட்டம் | மூணாறு படப்பிடிப்பில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஜீப் விபத்தில் காயம் | பத்மஸ்ரீ விருதை விட சல்மான்கான் படத்தை இயக்கியது தான் பெரிய சாதனை ; பிரியதர்ஷன் | சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு |
மலையாளத்தில் 2019ல் பஹத் பாசில் நடிப்பில் கும்பலாங்கி நைட்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் மது சி நாராயணன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் நாயகர்கள் என ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' புகழ் சவ்பின் சாஹிர், ஸ்ரீநாத் பாஷி, ஷேன் நிகம், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தாலும் இடைவேளைக்கு பிறகு படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பஹத் பாசில் தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பை அள்ளினார். அப்படி ஒரு வெற்றி படத்தை கொடுத்த மது சி நாராயணன் அதன்பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை.
இதற்கிடையே அவர் மோகன்லாலை வைத்து படம் இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டு வந்து பின்னர் அந்த தகவலும் அப்படியே அமுங்கி போனது. இந்த நிலையில் தான் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் தனது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். பிரேமலு படத்தில் நடித்த நஸ்லேன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடப்பது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்திலும் அறிவித்துள்ளார் மது சி நாராயணன்.