பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். சில நாட்களுக்கு முன்பு தன் மீது சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதல் நடத்தியதாக சொல்லி 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். அதில் கேரளாவை சேர்ந்த பிரபலமான நகைக்கடை உரிமையாளர்களின் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரும் ஒருவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டு போலீசாரின் விசாரணைக்கு ஆளானார். அதைத்தொடர்ந்து 6 நாட்களில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளியே வந்தார்.
இவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் காக்கநாடு சிறையின் டிஐஜி மற்றும் சூப்பரின்டென்ட் இருவரும் இவருக்கு சிறையில் சில சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து, சலுகைகளையும் வழங்கி உள்ளனர். குறிப்பாக இவரை சந்திக்க வந்த மூன்று நபர்களை சிறைக்குள் அனுமதித்ததுடன் அவர்களது பெயர்களையும் ரிஜிஸ்டரில் பதிவு செய்யாமல் விட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.