பிளாஷ்பேக் : ரஜினிகாந்துக்கு எழுதிய கதையில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: ஹீரோவாக நடித்த ஏ.பி.நாகராஜன் | ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு | ஆஸ்கருக்கு செல்லும் சூர்யா மகளின் ஆவணப்படம் | இசை அமைப்பாளர் தேவாவிற்கு ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கவுரவம் | சட்டப்படி வாங்கிய கார்களை திருப்பித்தர வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் துல்கர் மனு | இளையராஜா பாடல்கள் மூலம் சம்பாதித்தது எவ்வளவு? : 'சோனி'யிடம் நீதிமன்றம் கேள்வி | முதல் நாள் வசூல் : இந்திய அளவில் டாப் 10ல் தென்னிந்தியப் படங்கள் | மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 |
மலையாளத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பஷில் ஜோசப் இயக்கியிருந்தார். அதற்கு முன்னதாக அவர் குஞ்சி ராமாயணம், கோதா ஆகிய படங்களை இயக்கி இருந்தாலும் அதன்பிறகு அவரை தேடி நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் வர ஆரம்பித்தன. அவரும் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அப்படி அவரது நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில், சமீபத்தில் வெளியான சூட்சும தர்ஷினி உள்ளிட்ட பல படங்கள் தொடர் வெற்றியையும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
தற்போது வெளியாகி உள்ள பிறாவின்கூடு ஷாப்பு என்கிற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பஷில் ஜோசப். போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை என்பதாலோ என்னவோ, இவர் சிங்கம் பட சூர்யாவை தனக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் படப்பிடிப்பிற்கு தான் வரும் போதெல்லாம் சிங்கம் படத்தின் பின்னணியை இசையை படப்பிடிப்பு தளத்தில் ஒலிக்க விடுமாறு கூறி தினசரி கெத்தாக படப்பிடிப்பிற்கு வந்து சென்றாராம். இந்த தகவலை சமீபத்தில் அவரே ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார்.