ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துகான் சிங். தொடர்ந்து றெக்க, காஞ்சனா 3, ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான டர்போ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தான் இவர் அதிக அளவில் தற்போது மலையாள ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் தற்போது சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் ஒத்த கொம்பன் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கபீர் துகான் சிங். இந்த படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.