சிறையில் இருந்து வந்தபின் முதன்முறையாக குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடிய தர்ஷன் | மலையாளத்தில் நரி வேட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சேரன் | படத்தின் நீளம் குறித்த பாலாவின் பேச்சுக்கு வரவேற்பு : விமர்சனத்திற்கு ஆளான ஷங்கரின் பதில் | பாலகிருஷ்ணாவுடன் நடனம் : கிண்டலடித்த ரசிகர்களுக்கு ஊர்வசி ரவுட்டேலா பதிலடி | ஹனிரோஸ் புகார் விவகாரம் : ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருந்து வெளிவர அடம்பிடித்த நகைக்கடை அதிபர் | ரம்பாவின் ரீ-என்ட்ரியை வரவேற்கும் ரசிகர்கள் | தல பொங்கலை கொண்டாடிய அரவிஷ் - ஹரிகா, விக்ரமன் | ஹிந்தி நடிகர் சைப் அலிகானுக்கு கத்திக்குத்து : மருத்துவமனையில் அனுமதி | ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு |
கன்னட நடிகர் தர்ஷன் சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ரேணுகா சுவாமி தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என சொல்லப்பட்டது.
நடிகை பவித்ரா கவுடா உட்பட 16 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பல மாதங்களாக ஜாமின் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் அனைவருக்குமே நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து பெங்களூருக்கு மைசூருக்கு அருகில் உள்ள தனது பண்ணை வீட்டில் சென்று வசித்து வருகிறார் தர்ஷன்.
இந்த பிரச்சனைக்கு முன்னதாக தனது மனைவி விஜயலட்சுமி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தார் தர்ஷன். ஆனால் இந்த வழக்கில் தர்ஷனை வெளியே கொண்டு வருவதற்காக அவரது மனைவி விஜயலட்சுமி தான், கருத்து வேறுபாடுகளை மறந்து முனைப்புடன் செயல்பட்டு வந்தார். தர்ஷன் சிறையிலிருந்து வெளிவந்ததும் மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் ஆகியோரும் தற்போது தர்ஷனுடன் தான் இந்த வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த சங்கராந்தி பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடி தனது ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் தர்ஷன். அவர் இப்படி குடும்பத்துடன் ஒன்றிணைந்து சந்தோசமாக பண்டிகையை கொண்டாடுவதை பார்த்து அவரது ரசிகர்கள், தங்களது பாஸ் திரும்பி வந்து விட்டார் என உற்சாகமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.