அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் சில மாதங்களாகவே, சோசியல் மீடியாவில் சிலர் தன் மீது சைபர் தாக்குதல் நடத்துவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறினார். அதன் காரணமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். அதில் பிரபல கேரள நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் நீதிமன்ற கஸ்டடியில் எடுக்கப்பட்டு காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் போலீஸார் விசாரணையை முடித்து பாபிக்கு ஜாமின் வழங்கலாம் என பரிந்துரை செய்தனர்.
இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. அதே சமயம் அது குறித்த உத்தரவு சிறைக்கு சரியான சமயத்தில் வந்து சேரவில்லை என்றும் டெக்னிக்கல் கோளாறு என்றும் காரணம் சொல்லப்பட்டது. அதே சமயம் அவரை வரவேற்பதற்காக அவருடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் சிறை வாசலில் வந்து காத்திருந்தனர். ஆனால் பாபியோ தான் அங்கிருந்து செல்ல விரும்பவில்லை என்று கூறி, “இதுபோல பல பேர் ஜாமின் கிடைத்தும் டெக்னிக்கல் கோளாறு என்கிற காரணத்தால் இன்னும் சிறையில் இருக்கின்றனர். அவர்கள் சார்பாக நான் இங்கேயே இருக்கப் போகிறேன்” என்று கூறி திடீரென ஒரு அதிரடி ஸ்டன்ட் அடிக்க தொடங்கினார்.
இந்த தகவல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றதும், நீதிபதி குஞ்சி கிருஷ்ணன், “பாபியின் ஜாமின் உத்தரவு குறித்த நேரத்தில் நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. டெக்னிகல் தாமதம் என்பதற்காக சிறையில் ட்ராமா பண்ணிக்கொண்டு அவர் நீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா” என காட்டமாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து தனது வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட பாபி செம்மனூர், பின்னர் ஒரு வழியாக நேற்று சிறையில் இருந்து வெளியேறி உள்ளார். தன் மீதான புகாரை திசை திருப்புவதற்காக தான் அவர் இப்படி அதிரடியாக ஒரு விஷயத்தை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.