மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
மலையாள திரையுலகில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளரும் பின்னர் நடிகராக மாறியவருமான ரமேஷ் பிஷரோடி. இவர் குஞ்சாக்கோ போபன், ஜெயராம் இணைந்து நடித்த பஞ்சவர்ண தத்த என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதனைத் தொடர்ந்து மம்முட்டியின் சில படங்களில் அவருடன் இணைந்து நடித்து அந்த நட்பின் அடிப்படையில் மம்முட்டியை வைத்து ‛கான கந்தர்வன்' என்கிற படத்தையும் இயக்கினார். தொடர்ந்து தற்போது படங்களில் நகைச்சுவை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக மம்முட்டியின் படங்களில் தவறாக இடம் பெறுகிறார்.
அதுமட்டுமல்ல எப்படி மோகன்லால் சுப நிகழ்வுகளுக்கும் துக்க நிகழ்வுகளுக்கும் சென்றால் அவருடன் அவரது நண்பரான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தவறாமல் கூடவே செல்கிறாரோ அதேபோல தற்போது மம்முட்டிக்கும் இப்படி ஒரு துணையாக மாறி நிழல் போல தொடர்கிறார் நடிகர் ரமேஷ் பிஷரோடி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குனருமான எம்.டி வாசுதேவன் நாயர் மரணம் அடைந்தபோது அந்த சமயத்தில் ஊரில் இல்லாத மம்முட்டி சில நாட்கள் கழித்து அவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார். அப்போது உடன் சென்றிருந்தவர் இந்த ரமேஷ் பிஷரோடி தான்.
அதேபோல தற்போது தனது மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன ஜார்ஜ் என்பவரின் மகள் திருமண நிச்சயதார்த்தத்திலும், துல்கர் சல்மான் உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் மம்முட்டி. அப்போதும் இந்த நிகழ்வில் மம்முட்டியுடன் சேர்ந்து ரமேஷ் பிஷரோடி கலந்து கொண்டார். இப்படி இளம் நடிகரும் இயக்குனருமான ஒருவருடன் மம்முட்டி இணைந்து நட்பு பாராட்டி வருவது மலையாளத்தில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.