குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீப காலங்களாக தனது சர்ச்சையான பேச்சுக்களால் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவரது படங்கள் தான் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் ஆகும் போதும் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அனல் பறக்கும், ரத்தம் தெறிக்கும் அதிக அளவு வன்முறை காட்சிகளுடன் தனது படங்களை கொடுத்து வந்தவர் ராம்கோபால் வர்மா. இப்போது மலையாளத்தில் வெளியாகி உள்ள உன்னி முகுந்தன் நடித்துள்ள ‛மார்கோ' திரைப்படம் தனது படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக வன்முறை விருந்தாக உருவாகி இருப்பதை பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.
இது குறித்து தனது மகிழ்ச்சியை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராம்கோபால் வர்மா, “மார்கோ படத்தை விட வேறு எந்த ஒரு படத்திற்கும் இந்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான பாராட்டு கிடைத்திருக்குமா என்றால் ஒருபோதும் இல்லை. அந்த அளவிற்கு இந்த படத்தை பார்ப்பதற்கு நான் சாவதற்கு கூட தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னி முகுந்தன் என்னை நிச்சயம் கொல்ல மாட்டார் என்றும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட ஏழு சண்டை காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. ஏழுமே அதிக அளவில் வன்முறை கொண்ட சண்டைக் காட்சிகளாக தான் படமாக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த படம் ராம்கோபால் வர்மாவின் பாராட்டுகளை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.