'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
88 வயதான பிரபல மூத்த மலையாள நடிகர் டிபி மாதவன் நேற்று முன்தினம் வயது மூப்பு காரணமாக காலமானார். தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், மலையாள நடிகர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கேரளாவில் பத்தினாபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் புகலிடமான காந்தி பவனில் தன் வாழ்க்கையை கழித்து வந்தார் டி.பி மாதவன். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
பாலிவுட் இயக்குனரான ராஜா கிருஷ்ண மேனன் இவரது மகன் தான். ஆனால் குடும்ப பிரச்னை காரணமாக கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே அதாவது மகன் இரண்டரை வயதில் இருக்கும்போதே குடும்பத்தினர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.
இப்போது வரை தனியாக வசித்து வந்த டிபி மாதவனுக்கு எப்படியேனும் தன் மகனை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்பது கடைசி ஆசையாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே அவர் இறந்து விட்டார். இந்த நிலையில் இத்தனை வருடங்களாக தந்தையை பிரிந்து இருந்த அவரது மகன் ராஜா கிருஷ்ண மேனனும் அவரது தங்கை தேவிகாவும் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டி.பி மாதவனின் இறுதிச்சடங்கில் நேரில் கலந்துகொண்டு தங்களது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.