நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா |

கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவிதேவன் இயக்கி உள்ள படம் 'சிங்கா'. இதில் ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி.மதியழகன், தித்திர் பிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயகுனர் ரவிதேவன் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழு நீளத் திரைப்படமாக தயாராகிறது. விலங்கு நல வாரியத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இப்படத்தை உருவாக்கி வருகிறோம். பலருக்கு கதை பிடித்தபோதும், நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.
எதிர்மறை பெண் கதாபாத்திரம் 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு உகந்த, பயப்படாத நடிகையை கடுமையான தேடலுக்கு பிறகு கண்டறிந்தோம். 1945, பொதுநலன் கருதி மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்த லீஷா எக்லேர்ஸ் இந்த வேடத்தை திறம்பட செய்துள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பான் - இந்தியா திரைப்படமாக தயாராகி வரும் இப்படத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிப்பார்கள். என்றார்.