ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' |
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசிப்படம் ஜனநாயகன். அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் போஸ்டரில் , நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலில் ஒரு சாட்டையை கையில் எடுத்தபடி எம்ஜிஆர் பாணியில் போஸ் கொடுத்தார் விஜய். தொடர்ந்து அவரின் பிறந்தநாளில் மேலும் சில போஸ்டர்கள் வெளியாகின. அதில் ஒரு போஸ்டரில் போலீஸ் ரோலில் இருந்தார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் எம்ஜிஆரின் அந்த நான் ஆணையிட்டால் பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பதாக அப்பட வட்டாரங்களில் கூறுகிறார்கள். அதோடு ஜனநாயகன் படத்தின் தளபதி கச்சேரி என்ற முதல் சிங்கிள் பாடலை வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.