அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் |

வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம், அடுத்த ஆண்டு ஜனவரி 9ல் ரிலீஸாகிறது. முன்னதாக இந்த ஆண்டு பாடல்கள் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதாலும், விஜய் கலந்து கொள்ளும் அவர் சம்பந்தப்பட்ட கடைசி சினிமா விழா என்பதாலும், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா முக்கியத்துவம் பெறுகிறது.
பொதுவாக அவர் சம்பந்தப்பட்ட விழாக்கள் சென்னை நேரு ஸ்டேடியம், தனியார் கல்லுாரி, ஓட்டல்களில் நடக்கும். இப்போது அவர் ஆளுங்கட்சியை அதிகமாக விமர்சனம் செய்வதால் அப்படி நடத்த வாய்ப்பில்லை. விழா நடத்துபவர்களுக்கு பிரஷர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் டிசம்பர் 27ம் தேதி நடத்தலாமா என்று படக்குழு யோசிக்கிறதாம்.
மலேசியாவில் நடத்தினால் அரசியல் பேசலாம். குட்டிக்கதை சொல்லலாம். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அரசியல் பிரஷர் இருக்காது என்று நினைக்கிறார்களாம். தமிழகம், மலேசியா என எங்கு விழா நடத்தினாலும் அந்த விழா ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், படக்குழுவோ, ஏதாவது வில்லங்கமாக பேசி, பட ரிலீசுக்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டாம். சில நுாறுகோடி பிஸினசை தட்டிவிட வேண்டாம். சினிமா வேறு, அரசியல் வேறு. இரண்டையும் கலக்க வேண்டாம். அவர் ஏதாவது பேசினால் படத்தை தமிழகத்தில் சுமுகமாக ரிலீஸ் செய்ய முடியாது. அது நடந்தால் பெரிய இழப்பு ஏற்படும். அதை யோசித்து விழாவை விஜய் நடத்த வேண்டும் என்று நினைக்கிறதாம். கர்நாடகாவை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் ஜனநாயகன் படத்தை த யாரிப்பது குறிப்பிடத்தக்கது.