சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

இட்லி கடை படம் தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சிகளில், தான் சின்ன வயதில் கஷ்டப்பட்டது, தனது குடும்பம் பணப்பிரச்னைகளை சந்தித்தது. தான் அவமானங்களை எதிர்கொண்டது குறித்து மனம் திறந்து பேசி வருகிறார் தனுஷ். இதுவரை எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும், இப்படி குடும்ப விஷயங்களை தனுஷ் அதிகம் சொன்னது இல்லை. அவருடைய சின்ன வயது வாழ்க்கையில் இருந்து, அவரின் சொந்த ஊரான தேனி பக்கம் உள்ள கிராமத்தில் இருந்து கதை எடுத்து இருப்பதால் இதை சொல்வதாக தகவல்.
இயக்குனர் விசுவிடம் உதவியாளராக பணியாற்றவர் கஸ்துாரிராஜா. தனுஷ், அவர் அண்ணன் செல்வராகவன், சகோதரிகள் 2 பேர் என, குடும்பத்தில் மொத்தம் 4 குழந்தைகள். ஒரு கால கட்டம்வரை அந்த குடும்பம் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறது. கஸ்துாரிராஜா இயக்குனர் ஆனபின் ஓரளவு வசதி ஆனார்கள். பின்னரும் சில படங்களால் அவர் கடனாளி ஆக, மீண்டும் கஷ்டப்பட்டார்கள்.
நடிகராக தனுஷ் ஜெயித்த பின்னரே அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் மீண்டார்கள். இப்போது தனுஷ், அவர் அண்ணன், சகோதரிகள் என அனைவருமே கோடீஸ்வரர்கள். ஆனாலும் பழசை மறக்காத தனுஷ், தான் பட்ட கஷ்டங்களை இத்தனை ஆண்டுகள் கழித்து மேடையில் சொல்லி வருகிறார். அவரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தின் சீன்களாக இருக்கிறது. இட்லி கடை படம் பலரை அழ வைக்கும் என்கிறார்கள்.