ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 14ல் வெளியான படம் 'கூலி'. இப்படம் முதல் நாளில் 151 கோடி ரூபாயை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பிறகு நான்கு நாளில் 404 கோடி வசூலித்ததாக சொன்னவர்கள் அதன்பின் இதுவரையில் எந்த வசூல் அறிவிப்பையும் வெளியிடவில்லை.
நேற்றோடு இப்படம் இரண்டு வாரங்களை நிறைவு செய்து மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் ஓரளவிற்கு தியேட்டர்களில் வசூல் இருக்கும். திங்கள் கிழமை முதல் அது குறைவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி படம் 500 கோடி வசூலைக் கடந்ததாகச் சொன்னார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலும் இப்படம் லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது. இந்தக் காலத்தில் எவ்வளவு பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் ஒரு வாரம் வரை ஓடுவதே பெரிய விஷயாமக உள்ளது. 'கூலி' படம் இரண்டு வாரம் தாக்குப் பிடித்து ஓடிவிட்டது.