நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான சில திரைப்படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளன. ஆனால், தமிழ் சினிமாவில் இன்னும் அந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்ட சில படங்களும் 500 கோடி வசூலைக் கடந்து நின்றுவிடுகின்றன.
தெலுங்கு சினிமாவில் இப்படி 1000 கோடி வசூலிப்பதன் காரணம் என்ன என்பதைப் பற்றி ஐதராபாத்தில் நடந்த 'மதராஸி' பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
“மதராஸி' படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ், பெரிய நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ்பாபு ஆகியோரை இயக்கியவர். அவருடன் நான் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியானது. இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. அனிருத் அற்புதமான பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்துள்ளார்.
திருப்பதி பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். 'கன்டென்ட்' சிறப்பாக இருந்தால் அவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். அதனால்தான் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து 1000 கோடி என படங்கள் ஹிட் ஆகின்றன. 'மதராஸி' படத்திற்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நிச்சயம் இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று பேசியுள்ளார்.
தெலுங்கு சினிமாவிற்குச் சென்று அங்கு அவர்களைப் பாராட்டிப் பேசுவதில் தவறில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் 'கன்டென்ட்' நன்றாக இருந்தாலும் செலவு செய்வதில்லை என்று மறைமுகமாக சொல்வது போல் இருக்கிறதே?.