நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் |
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விட்டன. நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடும் மனிதர்களை மீட்க பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து இரவு பகலாக செயல்பட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கும் விதமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
முதல் ஆளாக தமிழகத்தில் இருந்து நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை கேரள முதல்வர் நிதிக்கு வழங்கி இதை துவங்கி வைத்தார். இதையடுத்து சூர்யா - கார்த்தி - ஜோதிகா தரப்பில் ரூ.50 லட்சம் நிதி அளித்தனர். இதனை அடுத்து தற்போது மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து 35 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். அது மட்டுமல்ல மம்முட்டியின் அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சேவையையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதேப்போல நடிகர் பஹத் பாசில் மற்றும் அவரது மனைவி நஸ்ரியா இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். நடிகை நிகிலா விமல் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்களை திரட்டும் பணியில் தன்னார்வலாக தன்னை இணைத்துக் கொண்டு களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.