ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
தெலுங்குத் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம், வளர்ந்து வரும் இளம் நடிகரான ராஜ் தருண் மற்றும் நடிகை லாவண்யா சவுத்ரி ஆகியோரின் காதல் விவகாரம் தான். தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி பழகிவிட்டு தற்போது தன்னை ஒதுக்கி விட்டார் என கூறி லாவண்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் ராஜ் தருண் மீது நர்சிங்கி போலீசார் எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ராஜ் தருண் கதாநாயகனாக நடித்துள்ள திரகபதர சாமி என்கிற படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இதற்கு முன்னதாக சமீபத்தில் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பாராத விதமாக வருகை தந்த நடிகை லாவண்யா சவுத்ரி தனது காதலரான ராஜ் தருணை நேரில் சந்தித்து பேச முயற்சி செய்தார். ஆனால் இருவருக்குமான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் லாவண்யா இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அங்கிருந்தபடியே, என்னுடைய ராஜ் தருணை சந்தித்து பேச என்னை விடுங்கள்.. எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஒரு மனிதன் எதற்காக ஓட வேண்டும் என்று கேள்விகளை எழுப்பிய லாவண்யா, இந்தப் படத்தின் நாயகி மால்வி மல்கோத்ராவுக்கும் ராஜ் தருணுக்கும் இருக்கும் உறவு குறித்தும் கேள்வி எழுப்பினார். ஆனாலும் போலீசார் லாவண்யா சவுத்ரியை வாசலிலேயே திருப்பி அனுப்பினார். இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.