'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
நடிகர் மோகன்லால் தற்போது ஒரே நேரத்தில் லூசிபர்-2 மற்றும் தனது 360வது படம் என இரண்டு படங்களில் மாறிமாறி நடித்து வருகிறார். இதில் இன்னும் பெயரிடப்படாத அவரது 360வது படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் மோகன்லாலுடன் நடிகை ஷோபனா இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால் ஒரு டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் அவர் தனக்கு சொந்தமான ஒரு பழைய அம்பாஸிடர் காரை தனது உயிராக பாவித்து அதை பாதுகாத்து அதன் மூலம் வாழ்க்கையை நடத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட படிக்காதவன் படத்தில் ரஜினிகாந்த் இதேபோன்ற கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லாலின் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் தருண் மூர்த்தி கூறும்போது, “இந்த படத்தில் நான் 80-90களில் வந்த விண்டேஜ் மோகன்லாலை காட்டப்போகிறேன் என்று சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு புதிய மோகன்லாலை இந்த படத்தில் பார்க்கலாம். அவரது நடிப்புமே இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.