பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

முன்னணி மலையாள நடிகை ரஜிஷா விஜயன். 'அனுராக கார்க்கின் வெள்ளம்' படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு ஒரு சினிமாக்காரன், ஜூன், பைனல், லவ், கீடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் ஜெய்பீம், கர்ணன், சர்தார் படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் ரஜிஷாவும் மலையாள ஒளிப்பதிவாளர் டோபின் தாமசும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியானது. இருவரும் ஜோடியாக சில இடங்களில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்தது. காதலை பற்றி இருவருமே மவுனம் காத்து வந்த நிலையில், ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இருவருமே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் இருவருமே தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர்.
இருவர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தெரிகிறது. வருங்கால மணமக்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




