குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
'பவுண்ட் புட்டேஜ்' என்பது கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தாங்கள் காணும் காட்சிகளை தங்களின் செல்போன் மூலமாகவோ, அல்லது அவர்களிடம் உள்ள கேமரா மூலமாகவோ படம் பிடித்து செல்வார்கள். பின்பு அவைகள் தொகுக்கப்பட்டு ஒரு கதையாக சொல்லப்படும். ஹாரர் மற்றும் திகில் படங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும். தி பிளேர் விட்ச் ப்ராஜெக்ட், கன்னிபால் ஹோலோகாஸ்ட், பாராநார்மல் ஆக்டிவிட்டி, டைரி ஆப் தி டெட், ஆர்இசி, க்ளோவர்பீல்ட், இன்கண்டேஷன் போன்ற ஹாலிவுட் படங்கள் இந்த தொழில்நுட்பத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதே போன்ற ஒரு படம் தற்போது 'புட்டேஜ்' என்ற பெயரிலேயே மலையாளத்தில் தயாராகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்கிறார். அஞ்சாம் பாதிரா, கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் படங்களில் பணியாற்றிய எடிட்டரான சைஜு ஸ்ரீதரன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சுஷின் ஷியாமின் இசை அமைக்கிறார். ஷினோஸ் வினோதமன் ஒளிப்பதிவை ஒருங்கிணைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் கூறும்போது “புட்டேஜ் வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் கதை சொல்லலை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இப்படம் இருக்கும்” என்றார். ஆகஸ்ட் 2ல் படம் வெளியாகிறது.