ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
நடிகர் பஹத் பாசில் நடிப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஆவேசம். இந்த படத்தில் ரங்கா என்கிற ரவுடி கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்திலும் வித்தியாசமான நடிப்பிலும் ரசிகர்களை வர்ந்தார் பஹத் பாசில். அந்த படத்தில் அவர் பேசும் வசனங்கள் மட்டுமல்லாது படத்தில் இடம்பெற்ற இலுமினாட்டி மற்றும் கரிங்காலியல்லோ என்கிற இரண்டு பாடல்களும் மலையாள ரசிகர்களையும் தாண்டி அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் பாடல்களுக்கு தான் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோவும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் கார்லெஸ் அல்கராஸ் என்பவர் விளையாடிய போது முதல் சுற்றில் அதிக புள்ளிகள் கணக்கில் தனது எதிரியை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் கார்லெஸ் அல்கராஸ் ஆவேசமாக விளையாடும் காட்சிகளை தொகுத்து அதன் பின்னணியில் ஆவேசம் படத்தில் இடம்பெற்ற இலுமினாட்டி பாடலை இடம்பெறச் செய்துள்ளனர். இந்த வீடியோவை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை விநாயக் சசிகுமார் எழுத இசையமைப்பாளர் சுசின் சியாம் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.