மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
மலையாள சினிமாக்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் கூட்டிக்கல் ஜெயசந்திரன். ராசலீலா, சாந்துப்பொட்டு, திளக்கம், சிரிக்குடுக்கா, வர்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். 48 வயதான இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு விருந்தினராக சென்றிருந்தபோது அங்கு பக்கத்து வீட்டில் இருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு கசபா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் மற்றும் கேரள டிஜிபியிடம் புகார் செய்து உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் ஜெயச்சந்திரன் கைது செய்ப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.