25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பைசன் காளமாடன். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படம் வருகிற தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. இதற்கு முன்பு தான் நடித்த படங்களில் ஸ்டைலிசான தோற்றத்தில் நடித்திருந்த துருவ் விக்ரம், இந்த படத்தில் தென்மாவட்ட கபடி விளையாட்டு வீரராக களமிறங்கி உள்ளார். கடந்த ஒன்றாம் தேதி பைசன் படத்தின் தீ கொளுத்தி என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் றெக்க றெக்க என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ், அறிவு இந்த பாடலை எழுதியிருக்கிறார்கள். இந்த பாடலில் துருவ் விக்ரம் உடற்பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. முதல் பாடலை விட இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மணத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் இப்படம் உருவாகி உள்ளது.