டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நடிகர் ரவி மோகன் ஜீனி, கராத்தே பாபு, ப்ரோ கோட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மறுபுறம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகவும் பிஸியாகி வருகிறார். இயக்குனராக தனது முதல் படமாக யோகிபாபுவை வைத்து ‛ஆர்டினரி மேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் தமிழில் குறைந்த பட்ஜெட்டில் பாண்டிய மன்னர்கள் காலத்தை மையப்படுத்தி வெளியான படம் 'யாத்திசை'. இந்தபடம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இதை தரணி ராசேந்திரன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்து ரவி மோகன் நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.