பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா | அபிஷேக் பச்சன் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்படுத்திய குழப்பம் ; தெளிவுபடுத்திய நிறுவனம் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் மகேஷ்பாபுவுக்கு கவுதம் என்கிற மகனும், சித்தாரா என்கிற மகளும் இருக்கின்றனர். இங்கே தமிழ் திரையுலக பிரபலங்களைப் போல் அல்லாமல் தனது மகன், மகள் இருவரையுமே வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தியே வளர்த்து வருகிறார் மகேஷ்பாபு. இதில் மகன் கவுதம் நியூயார்க்கில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். சமீபத்தில் அவர் பள்ளிப்படிப்பை முடித்ததை தொடர்ந்து பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டார் மகேஷ்பாபு. பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் மகேஷ்பாபு.
இது குறித்து மகேஷ்பாபு நெகிழ்ச்சியுடன் கூறும்போது, “என்னுடைய இதயம் பெருமையால் வெடிக்கிறது. உன்னுடைய கிராஜுவேஷனுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் மகனே.. இது நீ எழுதி இருக்கும் உன்னுடைய அடுத்த அத்தியாயம்.. அது மட்டுமல்ல.. முன் எப்போதையும் விட நீ இன்னும் பிரகாசிப்பாய் என்பதும் எனக்கு தெரியும். உன்னுடைய கனவுகளை துரத்திச் செல்.. உன்னுடைய தந்தையாக இன்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.