'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ. ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு இணையாக ரசிகர்களிடம் பெயர் பெற்ற வெகு சில தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். முன்னணி ஹீரோக்களை வைத்து கமர்சியல் படங்களாக தயாரிக்கும் இவர் அடிக்கடி சர்ச்சையாக ஏதாவது பேசி பரபரப்பிலேயே தன்னை வைத்துக் கொள்பவர். குறிப்பாக விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தபோது அந்த படம் குறித்தும் விஜய் குறித்தும் அவர் பேசியவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகின.
இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள பேமிலி ஸ்டார் என்கிற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம்போல தயாரிப்பாளர் தில் ராஜூவும் தன்னை இந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொண்டுள்ளார். வெறுமனே படத்தைப் பற்றி பேசுவதோடு மட்டுமில்லாமல் நாயகன் நாயகியோடு சேர்ந்து கைகோர்த்து நடனமாடி புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார் தில் ராஜு. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.