எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
மலையாளத் திரையுலகில் பிரபலமான இளம் நடிகராக இருப்பவர் உன்னி முகுந்தன். சமீப காலமாக ஒரு தயாரிப்பாளராகவும் மாறி அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களையும் கொடுத்தார். அதைவிட மலையாள சினிமாவின் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராக இருக்கிறார். இதனால் அவ்வப்போது சில நடிகைகளுடன் இவரை இணைத்து காதல் கிசுகிசுக்கள் வெளியாகி வருவது வாடிக்கையான விஷயம் தான்.
சமீபகாலமாக நடிகை அனுஸ்ரீக்கும் இவருக்கும் காதல் இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஜெய் கணேஷ் என்கிற படத்தில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 11ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் உன்னி முகுந்தன், நடிகை அனுஸ்ரீ ஆகியோர் இணைந்து இந்த காதல் கிசுகிசு குறித்து உண்மை என்ன என்கிற விளக்கம் அளித்தனர்.
இது குறித்து உன்னி முகுந்தன் கூறும்போது, “நாங்கள் இருவரும் இந்த ஒரு படத்தில்தான் இணைந்து நடித்துள்ளோம். அனுஸ்ரீக்காவது இப்படி காதல் கிசுகிசு வருவது முதன்முறை என்பதால் அவர் விளையாட்டாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வருடத்திற்கு இரண்டு முறை ஏதோ ஒரு நடிகையுடன் காதல் கிசு கிசு வெளியாவது எனக்கு இப்போது எல்லாம் வேதனையாக தான் இருக்கிறது. ஆனால் என்னுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் எல்லோருக்கும் அடுத்தடுத்து திருமணம் ஆகி விடுகிறது. அந்த வகையில் நடிகை அனுஸ்ரீக்கும் விரைவில் திருமணம் கைகூடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.