சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் |

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சிவா கொரட்டாலா என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இன்னொரு கதாநாயகியாக மராத்திய திரை உலகில் இருந்து ஸ்ருதி மராத்தே என்கிற நடிகை இந்த படத்தில் இணைகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஒருவருக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            