காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க களமிறங்கி இருக்கிறார் நடிகை பாக்யஸ்ரீ. மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட 'காந்தா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். செல்வமணி செல்வராஜ் இந்த 'காந்தா' படத்தை இயக்குகிறார்.இந்த திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும், நடிகர் துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த இவர் மராட்டிய அரச குடும்பத்தில் பிறந்தவர். நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு மராட்டிய படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் படத்தில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ கூறியது, இதுபோல் ஒரு மிகச்சிறந்த அறிமுகம் தமிழில் எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது. எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும், அந்த மொழியைக் கற்றுக் கொள்ள மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டேன். அதனால் எனது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடிந்தது. 'காந்தா' திரைப்படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்கள் என்னை ஏற்றுக் இங்குள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அதோடு நிறைய தமிழ் படங்களிலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.