நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி | முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! | 'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன் |
தேவரா படத்திற்கு பிறகு வார் 2 ஹிந்தி படத்தில் நடித்து வந்த ஜூனியர் என்டிஆர், தற்போது அப்படத்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் ஏப்ரல் 22ம் தேதி முதல் தனது 31வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கேஜிஎப் பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் 2026ம் ஆண்டு பொங்கலை ஒட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே ஜனவரி ஒன்பதாம் தேதி ஜூனியர் என்டிஆர் நடிக்கும் இந்த 31வது படமும் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.