மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
தேவரா படத்திற்கு பின் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்து கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினா தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளனர். ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளவில்லை. மார்ச் மாதத்தில் இருந்து தான் ஜூனியர் என்டிஆர் சம்மந்தப்பட்ட காட்சிகளைக் படமாக்கவுள்ளனர்.