சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பாலிவுட்டில் உருவாகியுள்ள வார் 2 திரைப்படம் பான் இந்தியா படமாக நாளை மறுநாள் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் முதன் முறையாக ஹிந்தியில் நுழைந்துள்ளதுடன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் விரைவில் ரிலீசாக இருப்பதை முன்னிட்டு இதன் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜூனியர் என்டிஆர் பேசினார்.
அப்போது அவரது பேச்சுக்கு இடையூறாக ரசிகர் ஒருவர் தொடர்ந்து இடையிடையே ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டே வந்தார். இதனால் டென்ஷனான ஜூனியர் என்டிஆர், “நான் இப்போது இங்கே பேசட்டுமா? இல்லை இந்த மேடையை விட்டு கிளம்பி போகட்டுமா? இந்த மைக்கை கீழே வைத்து விட்டு கிளம்பி போக எனக்கு ரொம்ப நேரமாகாது. அமைதியாக இருங்கள்” என்று சொன்னதும் தான் அந்த நபர் உள்ளிட்ட பலரின் சலசலப்பு பேச்சுக்கள் அடங்கின.