முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் |
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் ராம்சரணின் ரசிகர் வட்டமும் அதிகரித்துள்ளது. அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பும் இருமடங்காகி உள்ளது. குறிப்பாக தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்தை தென்னிந்தியா மட்டுமல்ல.. பாலிவுட் கூட ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தையும், இந்தியன் 2 படத்தையும் மாறி மாறி இயக்கி வருவதால் முதலில் இந்தியன் 2 வெளியாகும் என்றும் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் தசரா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கேம் சேஞ்சர் படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டு உள்ளனர்.
அதேசமயம் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் ஓஜி திரைப்படத்தையும் இதே தசரா பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஒஜி படத்தில் பவன் கல்யாண் இன்னும் 20 நாட்கள் நடித்தால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். ஆனால் அவர் நெருங்கி வரும் தேர்தலை முன்னிட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் தாமதமாகலாம் என்பதால் தசரா பண்டிகையை ரிலீஸ் தேதிக்கு குறி வைத்துள்ளனர்.
இதனால் கேம் சேஞ்சர் படத்திற்கு ரிலீஸ் தேதியில் மாற்றம் வரலாம் என்றும் தீபாவளி அல்லது தசரா பண்டிகையில் இப்படம் வெளியாகா விட்டால் இந்த படம் அடுத்த வருடம் ஜனவரியில் சங்கராந்தி பண்டிகைக்கு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் சித்தப்பாவே தனது மகனின் படத்திற்கு போட்டியாக வருகிறாரே என ராம்சரண் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் இன்னும் 8 மாத காலத்திற்கு மேல் அவகாசம் இருப்பதால் நிச்சயம் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்பார்கள் என நம்பலாம்.