மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே | மும்பையில் பரோஸ் டிரைலர் வெளியீடு : சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : இது தமிழில் ஓடாது... - பாசிலின் கதையை ஓரங்கட்டிய இளையராஜா | நடிகர் மோகன் பாபு தலைமறைவா...? | அல்லு அர்ஜுன் கைதுக்குப் பின், இறந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கு திரையுலகம் | ரஜினியின் நன்றிக் கடிதம் : கமல்ஹாசன் ரசிகர்கள் கோபம் | திருஷ்டி சுற்றி அல்லு அர்ஜுனை வரவேற்ற குடும்பத்தினர் | சட்டத்தை மதிக்கிறேன் - சிறையிலிருந்து விடுதலையான அல்லு அர்ஜூன் பேட்டி | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடாவுக்கு முன் ஜாமீன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ரவிதேஜா நடிப்பில் ஈகிள் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் கட்டமனேனி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி-9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த சங்கராந்தி பண்டிகையின்போது இந்த படம் ரிலீஸ் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதேசமயம் மகேஷ்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்டோரின் படங்கள் வெளியானதால் தியேட்டர்கள் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும் என கூறி, ஈகிள் படத்தை வேறொரு நாளுக்கு மாற்றி வெளியிடுங்கள் என்றும், அந்த நாளில் ஈகிள் படம் மட்டுமே சோலோவாக ரிலீஸ் ஆகும்படி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தெலுங்கு பிலிம் சேம்பர் உறுதி அளித்திருந்தது,
இதற்கிடையே ஊரு பேரு பைரவகோனா மற்றும் தில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் இதே தேதியில் ரிலீஸாவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தங்களின் ரிலீஸ் தேதியை வெவ்வேறு நாட்களுக்கு மாற்றி வைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஈகிள் படம் தெலுங்கில் சோலோவாக வெளியாகிறது. அதேசமயம் அதற்கு முதல்நாளான பிப்-8ஆம் தேதி மம்முட்டி-ஜீவா நடித்துள்ள யாத்ரா-2 படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.