பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | மறு தணிக்கைக்கு செல்கிறது 'பரமசிவன் பாத்திமா' | ஒரே படத்தோடு நடிப்புக்கு குட்பை சொன்னது ஏன்? - விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா | இப்ப நான் என்ன பண்றது? வடிவேலு பாணியில் புலம்பிய மோகன்லால் பட இயக்குனர் | வெள்ளிக்கிழமை மார்ச் 21ல் வெளியான படங்களின் ரிசல்ட் என்ன? | கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் |
நடிகர் மம்மூட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் 'பிரம்மயுகம்'. ராகுல் சதாசிவன் இயக்கும் இப்படத்தை நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் போஸ்டர்கள் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் குறைந்த நாட்களிலேயே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.