என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கில் பொங்கலை முன்னிட்டு முன்னணி கதாநாயகன் மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்', வளரும் நாயகன் தேஜா சஜ்ஜா நடித்த 'ஹனு மான்' ஆகிய படங்கள் ஜனவரி 12ம் தேதியும், சீனியர் கதாநாயகன் வெங்கடேஷ் நடித்த 'சைந்தவ்' நேற்று ஜனவரி 13ம் தேதியும், மற்றொரு சீனியர் நாயகன் நாகார்ஜுனா நடித்த 'நா சாமி ரங்கா' படம் இன்று ஜனவரி 14ம் தேதியும் வெளியாகியுள்ளன.
வெளியீட்டிற்கு முன்பாக 'ஹனு மான்' படத்திற்கு தெலுங்கு சினிமாவின் முக்கிய ஏரியாக்களான நிஜாம், உத்தராந்திரா ஆகிய இடங்களில் அதிகத் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. 'குண்டூர் காரம்' படத்தை வெளியிடும் தில் ராஜு அப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டினார்கள். இந்நிலையில் 'குண்டூர் காரம்' படத்தை விடவும், 'ஹனு மான்' படத்திற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், 'குண்டூர் காரம்' படத்தை விடவும் 'ஹனு மான்' படம் வசூலில் சாதனை படைக்க வாய்ப்புள்ளது என்று கூறி வருகிறார்கள்.
படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து அப்படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா, “எல்லா இடங்களிலிருந்தும் கிடைக்கும் சிறப்பான வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ரசிகர்கள் மிகவும் ஆதரவாக உள்ளார்கள். மற்ற மொழிகளில் நான் புதுமுகம் என்று சொன்னாலும், அங்கெல்லாம் எனக்குக் கிடைக்கும் வரவேற்பு ஆச்சரியமளிக்கிறது. ஹனு மான் படம் எனது திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும். ஒரு நல்ல படம் வந்தால் ரசிகர்கள் மிகவும் வரவேற்பார்கள் என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி. ஒரு தெய்வீக சக்தி எங்களை வழி நடத்துகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
தற்போது ஒவ்வொரு காட்சிக்கும் தியேட்டர்கள் அதிகமாகி வருகிறது. இப்படம் நான்கு வாரங்களுக்கு ஓடும் என்று உறுதியாக நம்பினோம். அடுத்த வாரம் வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.