மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு | 'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் |
மலையாளத்தில் கடந்த வருட இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக வெளியானது 'நேர்'. காரணம் ஏற்கனவே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் இந்த படம் உருவாகி இருந்தது தான். அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட படத்தின் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் ஒரு நீதிமன்ற அறைக்குள்ளேயே நடக்கும் விதமாக இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு சாதுரியமாக வழக்காடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லாலும் அவருக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞராக பிரியாமணியும் நடித்திருந்தனர். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் இந்த படத்தை இயக்கியிருந்தார் ஜீத்து ஜோசப். இந்த படம் வெளியான நாளிலிருந்து மிகச் சீரான வேகத்தில் வசூலை ஈட்டி வந்த நிலையில் படம் வெளியாகி, தற்போது 25 ஆவது நாளில் நூறு கோடி வசூல் கிளப்பில் வெற்றிகரமாக இணைந்துள்ள