ஆஸ்கருக்கு செல்லும் சூர்யா மகளின் ஆவணப்படம் | இசை அமைப்பாளர் தேவாவிற்கு ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கவுரவம் | சட்டப்படி வாங்கிய கார்களை திருப்பித்தர வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் துல்கர் மனு | இளையராஜா பாடல்கள் மூலம் சம்பாதித்தது எவ்வளவு? : 'சோனி'யிடம் நீதிமன்றம் கேள்வி | முதல் நாள் வசூல் : இந்திய அளவில் டாப் 10ல் தென்னிந்தியப் படங்கள் | மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி |
நடிகர் ஜெயராம் சமீபகாலமாக மலையாள படங்களில் கதாநாயகனாக நடிப்பதை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ், தெலுங்கு படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில், முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆப்ரஹாம் ஓஸ்லர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஜெயராம். முக்கிய வேடத்தில் மம்முட்டி நடித்துள்ள இந்த படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சிறப்புக்காட்சியை நடிகர் விஜய்க்கு திரையிட்டு காட்டி உள்ளார் ஜெயராம்.
தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வெங்கட் பிரபுவின் சரோஜா, விஜய்யின் துப்பாக்கி ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள ஜெயராம் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் இவர்களுடன் இணைந்துள்ளார். இந்த நிலையில் படப்பிடிப்பின் போது தன்னுடைய ஆப்ரஹாம் படம் ரிலீஸ் ஆகிவிட்டதாக விஜய்யிடம் ஜெயராம் கூற உடனடியாக அந்த படத்தை பார்க்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் விஜய்.
குறிப்பாக இந்த படத்தில் மம்முட்டி நடித்துள்ளதால் அவரைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தாராம் விஜய். இதனையடுத்து விஜய்க்கு தனியாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டியுள்ள ஜெயராம், இதுகுறித்த தகவலை சமீபத்திய ஆப்ரஹாம் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.