'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

இயக்குனர் த்ரி விக்ரம், நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 'குண்டூர் காரம்'. ஸ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இது தற்போது வசூலில் எதிரொலித்துள்ளது. முதல் நாள் உலகளவில் ரூ.94 கோடி வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இரண்டாவது நாள் முடிவில் உலகளவில் ரூ.127 கோடி வசூலித்ததாக அறிவித்துள்ளனர். இதன்படி, முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் பெரிதளவில் குறைந்ததாக தெரிகிறது.




