சந்தானம் பட பாடல் சர்ச்சை : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ் | ''கெட்ட பழக்கங்களை விட்டு 5 வருஷமாச்சு'': விஷால் விளக்கம் | 'படையாண்ட மாவீரா' படத்தை வெளியிட தடை | தமன்னாவை மறந்த தமிழ் சினிமா | பாதுகாப்பு கேட்டு கவுதமி போலீசில் புகார் | எழுத்தாளராக சத்யராஜ் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி | விஜய் ஆண்டனிக்கு மார்கன் கை கொடுக்குமா? | கை விடப்பபடுகிறதா இளையராஜா வாழ்க்கை வரலாறு | பிளாஷ்பேக்: தணிக்கையில் சிக்கிய மோகன் படம் | பிளாஷ்பேக்: லைலா - மஜ்னு: டப்பிங்கில் வெற்றி, ரீமேக்கில் தோல்வி |
தென்னிந்திய மொழிகளிலிருந்து தயாராகும் சில படங்கள் கடந்த சில வருடங்களில் பான் இந்தியா அளவில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளன.
'பாகுபலி 1 - 2, கேஜிஎப் 1 - 2, புஷ்பா 1, காந்தாரா' ஆகிய படங்கள் வட இந்திய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. தற்போது அந்த வரிசையில் தெலுங்கில் தயாராகி வெளிவந்துள்ள 'ஹனு மான்' படம் சேரும் என்கிறார்கள்.
இப்படத்தின் முதல் 3 நாள் ஹிந்தி வசூல் மட்டும் 12 கோடியைக் கடந்துள்ளதாம். 'கேஜிஎப் 1, காந்தாரா' படங்களின் வசூலை விட அதிகமாகவும், புஷ்பா 1 படத்திற்கு இணையாகவும் உள்ளதாக பிரபல பாலிவுட் விமர்சகர் தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் ராமர், ஹனுமான் சக்தியைப் பற்றிய பேன்டஸி படமாக வெளிவந்துள்ள 'ஹனு மான் படம் பெரிய வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.