சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து | பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா |
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை வந்தாலே நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு கூடும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஜன., 15) ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தார். அதோடு, வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் ரஜினியின் பக்கத்து வீட்டு வயதான பெண்மணி ஒருவர் ரஜினி ரசிகர்களின் தொல்லை பற்றி பாதுகாவலர்கள் மற்றும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‛‛தலைவா தலைவா என ரசிகர்கள் கோஷம் போடுவார்கள். எங்களை மாதிரி இந்த தெருவில் உள்ள 21 வீட்டுக்காரங்க கஷ்டப்படுகிறார்கள். ஏன் உங்க(ரஜினி) வீட்டு கேட்டை திறந்து உள்ளே விட வேண்டியது தானே. தலைவரை பார்க்க வேண்டியது தானே. நீங்க கேட்டை மூடியே வைக்கிறீங்க. இவங்க எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி வந்து தான் இப்படி கத்தி கூச்சலிடுகிறார்கள். நாங்களும் வரி கட்டுறோம் ஆனால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. போதாகுறைக்கு காலையில இப்படி பண்டிகை தினமும் அதுமா இப்படி தொந்தரவு செய்றாங்க. சாமி கூட கும்பிட முடியவில்லை'' என்றார்.