இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! |

மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தற்போது இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணி நடைபெற்று வருகிறது. பேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராணா டகுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இவரை வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கும் முயற்சிகளில் படக்குழுவினர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.