சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கியுள்ளன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அனிருத் இசையில் காவாலா என்கிற இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. வித்தியாசமான நடன அசைவுகளுடன் தமன்னா நடனமாடி இருந்த இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த பாடலுக்கு இப்போது வரை கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. திரையுலக பிரபலங்கள் கூட இந்த பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மலையாள வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ஷைன் டாம் சாக்கோ சக நடிகையுடன் சேர்ந்து இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அவருடன் ஆடும் நடிகை தமன்னாவின் நடனத்தை பிரதிபலிக்கும் முயற்சியுடன் ஆட, ஷைன் டாம் சாக்கோவோ தனது பாணியில் காமெடியாக நடனமாடுகிறார். இவர் இதே அனிருத் இசையில் இதற்கு முன் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார். அந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தையும் விஜய்யின் கதாபாத்திர வடிவமைப்பையும் இவர் கிண்டலடித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது என்பதும், அதன் பிறகு அப்படி பேசியதற்காக இவர் மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




