ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கடந்த 2003ல் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் சிஐடி மூஸா. ஜானி ஆண்டனி இந்த படத்தை இயக்கியிருந்தார். கதாநாயகியாக பாவனா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் போலீஸ் ஆக விரும்பும் ஒரு இளைஞனும் அவரை ஆக விடாமல் தடுக்கும் ஒரு போலீஸ்காரரும் என்கிற கான்செப்ட்டில் நகைச்சுவையாக உருவாக்கி இருந்தது. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படம் தமிழில் பிரசன்னா, வடிவேலு நடிக்க சீனா தானா 007 என்கிற பெயரில் வெளியாகி இங்கேயும் வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவின் இறுதியில் விரைவில் இரண்டாம் பாகம் என்கிற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதே சமயம் ரசிகர்கள் பலரும் இத்தனை வருடம் கழித்து இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் சாத்தியமா படம் வெளியானால் முதல் பாகத்தைப் போல வெற்றி பெறுமா என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
கரணம் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இப்போது உயிருடன் இல்லை. அதுமட்டுமல்ல படத்தின் நாயகியும் நாயகனும் கூட கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கடத்தல் வழக்கு காரணமாக இப்போது எதிரெதிர் துருவத்தில் இருக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்தே தான் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் என்றால் நிச்சயம் ஏதாவது புதிதாக முயற்சிப்பார்கள் என நம்புவோம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.